Monday, May 3, 2010

திராவிடர் கழகத்தின் சாதனய்!

கடந்த 3.5.2010 ஞாயிற்றுக் கிழமய் அன்று மாலய்/இரவு 8.15 தொடக்கம் 8.30 மணிக்குள் ஒரு பெரியாரிய ஆற்றல் திராவிடர் கழகத் தொண்டர்களால் மீண்டுமொரு முறய் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ஆம்! கணவனய் இழந்தாலும், தான் பெற்ற பிள்ளய்கள் மீதான் உரிமய்-கட்டுப்பாட்டய் இழக்காத தாய் ஒருவர் (ஆவடி தி.க. மாவட்டம், திருவூர், ராஜாஜி சாலய்-வாழ், திராவிடர் கழகக் கிளய் மேனாள் அமய்ப்பாளர் மானமிகு சுரேஷ் குமார் அவர்களின் அன்னய் பூபதி அம்மய்யார்தான் அவர்) தாலி எடுத்துக் கொடுக்க, அவரது மூன்றாவது மகன் ஏ. ஜெகன்னாதன், காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பாக்கத்தய்ச் சேர்ந்த மணமகள் பொ. லஷ்மி கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டார்.

திருவூர் ஊராட்சித் தலய்வர் திருமதி சுகன்யா (ஜீவா) அவர்களும் மிகவும் பெருந்தன்மய்யோடும், பெருமிதத்தோடும், தான் பணிக்கப்பட்டிருந்த தாலி எடுத்துக் கொடுக்கும் வேலயய், மணமகனின் விதவய்த் தாய் பூபதி அம்மய்யாருக்கு விட்டுக் கொடுத்து, தானும் தன் கணவர் பீம்ராவ் ஜீவா அவர்களும் சார்ந்திருக்கும் விடுதலய்ச் சிறுத்தய்கள் கட்சியின் நிறுவனர்-தலய்வர்-நாடாளுமன்ற மக்களவய் சிதம்பரம் தொகுதி உறுப்பினர்-எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்-களின் பெரியாரியப் புரட்சிக் கோட்பாட்டுக்கு இணங்க செயல்படும் ஒழுகலாற்றினய் வெளிப்படுத்தினார்.

மணமக்கள் இருவருமே, அழய்ப்பிதழில் சுட்டிக் காட்டப்பட்டி-ருந்த மாலய் 6 மணிக்கு அணியமாகி மேடய்க்கு வராமல், இரவு 8.15 மணிக்குத்தான் மணமேடய் ஏறியதால், மன்றல் ஒப்ப்ந்த விழா நடவடிக்கய்கள் ஆகலும் சுருக்கப்பட்டது; மன்றல் செல்வர்களய் தந்தய் பெரியார் தந்த உறுதி மொழிகளய் ஏற்க வய்த்ததோடு, இப்படிப்பட்ட சுயமரியாதய் மன்றல்களுக்கு யார் தலய்மய் தாங்கினாலும், தந்தய் பெரி-யார்தான் தலய்மய் தாங்குவதாகவும்; யார் முன்னிலய் வகித்தாலும் சுயமரியாதய்த் திருமணங்களுக்கு சட்ட ஒப்புதல் கொடுத்த பேரறிஞர் அண்ணா முன்னிலய் வகிப்பதாகவும்தான் பொருள்/அடய்யாளம் என்று மன்றலய் நடத்திவய்த்த கோரா சுட்டிக் காட்டத் தவறவில்லய்.

திருவூர் பகுதி விடுதலய்ச் சிறுத்தய்கள் செயல்வீரரும் ஊராட்சித் தலய்வரின் துணய்வருமான பீம்ராவ் ஜீவா மன்றல் மேடய் ஒழுங்குகளய் நெறிப்படுத்தினார். தனக்கும் தனது இணயர் சுகன்யாவுக்கும் சேர்த்து ஆடய் போர்த்தி பெருமய்படுத்த மணமகன் வீட்டார் முன்வந்தபோதும், ஊராட்சித் தலய்வரான தனது துணய்வியாருக்கு மட்டுமே ஆடய் போர்த்தி மரியாதய் செய்தால் போதும் என ஒதுங்கிக் கொண்டார். பின்னர், திருவூர் திக மேனாள் அமய்ப்பாளர் சுரேஷ் குமாரின் மனய்வி ஜெயந்தி, ஊராட்சித் தலய்வருக்கு ஆடய் போர்த்தி சிறப்பு செய்தார். உறுதி மொழி எடுக்க முன்னெடுத்துக் கொடுத்த, மணவிழாத் தலய்வர் கோராவுக்கும் மணமகன் வீட்டார் சார்பில் ஆடய் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

சுயமரியாதய் முறய்தனில், உறுதி மொழி எடுத்து மன்றல் காணவும், கணவனய் இழந்தாலும் மகன்கள் மீது பாசத்தய்-நேசத்தய், வீரத்தய் இழக்காத தாய் பூபதி அம்மாள் தாலி எடுத்துக் கொடுக்கவும் முழு மனதோடு ஒப்புதல் அளித்த இருவீட்டாரய்யும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மணமகள் வீட்டய்ச் சேர்ந்த பெரியவர் ஒருவர், மணமக்கள் உறுதி மொழி எடுத்த வாசகங்கள் அடங்கிய காகிதங்களின் படி தனக்கும் வேண்டும் என ஆர்வத்துடன் கேட்டபோது, அவ்வாறே செய்வதாக திருவூர் திக கிளய் மேனாள் அமய்ப்பாளர் சுரேஷ்குமார் உறுதி அளித்தார்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஒழிக பார்ப்பனர்!!!

No comments:

Post a Comment