Monday, May 3, 2010

சங்கத் தமிழ் அனய்த்தும் தா!

செம்மொழி மாநாட்டுச் சிந்தனய்:

சங்கத் தமிழ் அனய்த்தும் தா!

பெறுநர்:
முதன்மய்ச் செயலர்,
உயர்கல்வித் துறய்,
தலய்மய்ச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டய்,
சென்னய் - 600 009

மின்னஞ்சல்: இன்னமும் பெறப்படவில்லய்!

கோவய் மாநகரில் எதிர்வரும் யூன் திங்கள் 23 தொடக்கம் 27ஆம் திகதி வரய் நடய்பெறவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டய் ஒட்டி போட்டிக்கு அனுப்பப்படும் புதுக் கவிதய்(?)

அனுப்புநர்:
செல்வெல்முள் என்கிற மே. வ. கோவிந்த ராஜன்,
III/141, இராம் நகர்,
திருவூர்-602 025,
திருவள்ளூர் மாவட்டம்,
தமிழ் நாடு

சங்கத் தமிழ் அனய்த்தும் தா!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவய் நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று பாடினார் அவ்வய் என தமிழ் இலக்கியங்கள் கூறும்;
அவ்வய்ர் கடவுள் மடமய்த்தனத்தோடு பெண்ணடிமய்யயும் சேர்த்துப் பாடியவர்கள் என்பதால் பெரியாரியப் பெண்ணியவாதிகள் அவ்வ(ழி)யய் ஏற்கமுடியாது;

சரி! அறிவுலகப் பேராசான் அய்யா தந்தய் பெரியாரின் அருமந்த சீடர், மானமிகு-மாண்புமிகு கலய்ஞர் அவர்கள் தந்த சங்கத் தமிழ் பாடல் விளக்கங்களோ ஒரு நூறு/இரு நூறுக்களுள் அடக்கம்! சங்கத் தமிழ் என்னும் பனிமலய் தன்னின் ஒரு நுனியய்த் தொட்டுக் காட்டிய பெருமய்க்குரிய்வர் ( ) மானமிகு-மாண்புமிகு கலய்ஞர் ஒருவரே!

அவ்வய் கேட்டதாகச் சொல்லப்படுவதோ சங்கத் தமிழ் மூன்றும்தா-(ன்); கலய்ஞரோ அய்ந்தமிழ் அறிஞராக தமிழ் கூறும் நல்லுலகத்-தால் முன் இருத்தப்பட்டவர்; அறநூலாம் திருக்குறள் தந்த வள்ளுவரய் அ(ய்)யனாக்கி அழகு பார்த்தவர்;

அருங்காட்சியகத்து மூலய்தனில் அள்ளிவீசப்பட்ட கண்ணகிக்கு, அந்த அலய்கடலோரத்திலேயே மீளிடம் தந்த மீகாமன், கலங்காத கலங்கரய் விளக்கம்;

கடலாடிய தம்பி காளிமுத்துவுக்காக துறய்முகத்தில் காத்திருந்த, இலவு காத்த இலக்கியக் கிளி;

க-வய்த் தொடர்ந்து கா வருவது உண்மய் ஆனால், தொடருவது உறுதியானால், ஈழத் தமிழர்களின் இன்னல் களய்ந்திட தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் பதவியய்க் க துறந்தபோது, கா-வும் தொடரவில்லய்யே; காராக்கிருகம் காண முற்படவில்லய்யே - என இலக்கியக் கிடுக்கிப் பிடி போட்டு, சங்க(ட)த் தமிழால் அடித்து நொறுக்கிய ஆழ்கடல்;

கருணாநிதி உப்பு விற்கப் போனால், மழய் அடிக்கிறது மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது என இலக்கியத்தில் அரசியல் கலப்படம் செய்தவர், செய்யக் கரணியமாக இருந்தவர் என இருவருமே கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பின்னரும், அவர்களய் எல்லாம் விஞ்சி, சங்கத் தமிழ் அனய்த்துக்காகவும் உயிரோடும் உணர்வோடும் காத்திருக்கும்

அளக்கலாகா அளவும் பொருளும்
துளக்கலாகா நிலயுந் தோற்றமும்
அமய்க்க வாயின வரே

சங்கத் தமிழ் அனய்த்தய்யும் இறய்ஞ்சத் தகுந்தவர்! ஆண்டவரும் ஆள்பவரும் அவர்தான் என்பதால், அய்யா நெஞ்சில் ஒரு முள்ளய் வய்த்துப் புதய்த்துவிட்ட குறுகுறுப்புடன் அனய்த்து ஜாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் நிறய்வேற்றித் தந்த டாக்டர் கலய்ஞர் அவர்களிடம்-தான் சங்கத் தமிழ் அனய்த்தும் தா என்று உரிமய்க்குரல் கொடுக்க முடியும்!

தருவியா, தரமாட்டியா? தரலேன்னா உன் பேச்சு கா! என்ற தமிழ்த் திரய்ப்படப் பாடல் இங்கு பொருந்துமோ என்னவோ?

காவியக் கவிஞர் என்று அவாளாத்துப் பத்திரிகய்களால் பல ஏத்தி போற்றப்படும் வாலி-யார், தமிழய் வளர்ப்பதற்கு நாம் யார்? அது தாடி போல தானாகவே வளரும் - என்று ஏகடியம் செய்திருக்கிறார். பின் ஏன் அவர் தமிழ்த் திரய்ப்படங்களில் பாடல் எழுத முட்டி மோதுகிறாராம்? ஓகோ! பார்ப்பன வயிற்றுப் பிழய்ப்புக்குத் தமிழ்; வளர்க்க வேண்டுமென்று குரல் கொடுத்தால் தாடி வக்கிரமா?

அவ்வயய் அழய்க்காதீர்; அவ்வ(லி)யயும் மதிக்காதீர்!! வா(லு)லிகளய் எங்கே வய்க்க வேண்டும் என்பது எங்கள் கலய்ஞருக்குத் தெரியும்!

தரவு: விடுதலய், 27.4.2010

குறிப்போ குறிப்பு: எவ்வளவுதான் தலயய்ப் பிய்த்துக் கொண்டாலும், புதுக் கவிதய்யோ அல்லது எதுகய் மோனய்யுடன் கூடிய சந்தப் பாடலோ வந்து தொலய்க்கமாட்டேன் என்கிறது; இதற்கே இந்தக் கதி என்றால், மரபுக் கவிதய் பற்றிக் கேட்கவே வேண்டாம்! அதனால்தான், கட்டுரய் வடிவிலேயே, நாள் தவறாமல், மூன்றாம் பக்கத்தில், செம்மொழி மாநாட்டுச் செய்திகளய் வெளியிட்டு வரும் விடுதலய் நாளேட்டிலேயே வெளியிடுவது குறித்துப் பரிசீலிப்பதற்-காக இதனய் அனுப்பி வய்க்க, பிரின்ஸ் பெரியார் அல்லது விடுதலய் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே, திருவூர் தமிழ் அரசி அவர்களிடம் ஒத்தாசய்யோடு செய்யப்படுகிறது. மிஞ்சிப் போனால், பெரியார் ஈ.வே.இரா. குறும்பாவியம் யாத்த பகுத்தறிவுப் பாவலர் மானமிகு இலமா. தமிழ் நாவன் அவர்களய் நாடி, நான்மாடக் கூடலய் நண்ணினோம் என்ற பாணியில், நேரில் சந்தித்து மரபுக் கவிதய் தொடர்பான ஆலோசனய்களய்ப் பெற்று, கவிதய் வடிவம் தர முயலலாம்; எழுதியவர்கள் கோரா-தமிழ் நாவன் என்று கூடப் போட்டு, போட்டிக்கு அனுப்பி வய்க்கலாம்.

மனய்வி-மக்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், நா(வ)னும் பாதிக்குப் பாதி என்கிற வீதத்தில், பரிசுத் தொகய் ஏதும் கிடய்த்தால், பங்கு போட்டுக் கொள்ளும் நாணயமான உடன்படிக்கய் அடிப்படய்யில் வழமய்யான இந்திய அஞ்சலிலும், மின்னஞ்சலிலும் (இரண்டுமே இந்திய அரசாங்கத்தாரால் கட்டுப்படுத்தப்படுவதுதான்; மானமிகு ஆசிரியர் அவர்கள் ஒரு முறய் குறிப்பிட்டது போல, எந்தப் பார்ப்பனரல்லாதார் கய்யால், அஞ்சல்களய்ப் பெற்றுக் கொள்ள மனமின்றி, தீண்டிவிடக் கூடாது, கய்பட்டால் குற்றம் என்னும் பார்ப்பன ஆதிக்க மனப்பான்மய் மிக, ஒரு குச்சியில் கட்டி, நீட்டச் சொல்லிப் பெற்றுக் கொண்டார்களோ; அந்தக் காலகட்டத்தய்த் தலய்கீழாக மாற்றியமய்த்து, ஒரு துளி குருதி கூடச் சிந்தாமல், தாழ்த்தப்பட்ட இனத்தய்ச் சேர்ந்த ஆ. ராசாவய்யே இந்தியத் தகவல்-தொடர்புத் துறய் அமய்ச்சராக்கி, மவுனப் புரட்சி செய்த தமிழ் நாடு முதலமய்ச்சர் மானமிகு-மாண்புமிகு டாக்டர் கலய்ஞர் அவர்களய் இங்கே நினய்வு கூர்வது சாலப் பொருத்தமாகும்!) அனுப்பி வய்ப்பதுதான் அறிவுடய்மய் ஆக இருக்கும்;

முன்னரே எடுத்துக் காட்டியது போல, என்னதான் தலய்கீழாக நின்று தவமியற்றினாலும், புதுக் கவிதய் அல்லது எதுகய் மோனய் கூடிய சந்தக் கவிதய் வரவே மாட்டேன் என்கிறது; பயிற்சி இல்லாததுதான் முதன்மய் ஆனதும், முழுமய் ஆனதுமான கரணியமாகும்!

அவ்வய் (கய்யூட்டாகக்) கேட்டது சங்கத் தமிழ் மூன்று
அறிவார்ந்த கலய்ஞர் தந்தது சங்கத் தமிழ் இரு நூறு

என சந்தப் பாடல் இயற்றும் ஆற்றல் மேலே சொன்ன இரண்டு வரிகளோடு நின்று போனது; மனதய் ஒருமய்ப்படுத்தினால், ஒரு வேளய் முறய்சி கய்கூடலாம், மானமிகு இலமா. தமிழ் நாவன் போன்றோரின் உற்றுழி உதவியால்!

அனுப்புநர்: செல்வெல்முள் என்கிற மே. வ. கோவிந்த ராஜன், /141, இராம் நகர், திருவூர்-602 025, திருவள்ளூர் மாவட்டம், தமிழ் நாடு

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஒழிக பார்ப்பனர்!!!

திராவிடர் கழகத்தின் சாதனய்!

கடந்த 3.5.2010 ஞாயிற்றுக் கிழமய் அன்று மாலய்/இரவு 8.15 தொடக்கம் 8.30 மணிக்குள் ஒரு பெரியாரிய ஆற்றல் திராவிடர் கழகத் தொண்டர்களால் மீண்டுமொரு முறய் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

ஆம்! கணவனய் இழந்தாலும், தான் பெற்ற பிள்ளய்கள் மீதான் உரிமய்-கட்டுப்பாட்டய் இழக்காத தாய் ஒருவர் (ஆவடி தி.க. மாவட்டம், திருவூர், ராஜாஜி சாலய்-வாழ், திராவிடர் கழகக் கிளய் மேனாள் அமய்ப்பாளர் மானமிகு சுரேஷ் குமார் அவர்களின் அன்னய் பூபதி அம்மய்யார்தான் அவர்) தாலி எடுத்துக் கொடுக்க, அவரது மூன்றாவது மகன் ஏ. ஜெகன்னாதன், காஞ்சிபுரம் மாவட்டம், மேல்பாக்கத்தய்ச் சேர்ந்த மணமகள் பொ. லஷ்மி கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டார்.

திருவூர் ஊராட்சித் தலய்வர் திருமதி சுகன்யா (ஜீவா) அவர்களும் மிகவும் பெருந்தன்மய்யோடும், பெருமிதத்தோடும், தான் பணிக்கப்பட்டிருந்த தாலி எடுத்துக் கொடுக்கும் வேலயய், மணமகனின் விதவய்த் தாய் பூபதி அம்மய்யாருக்கு விட்டுக் கொடுத்து, தானும் தன் கணவர் பீம்ராவ் ஜீவா அவர்களும் சார்ந்திருக்கும் விடுதலய்ச் சிறுத்தய்கள் கட்சியின் நிறுவனர்-தலய்வர்-நாடாளுமன்ற மக்களவய் சிதம்பரம் தொகுதி உறுப்பினர்-எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்-களின் பெரியாரியப் புரட்சிக் கோட்பாட்டுக்கு இணங்க செயல்படும் ஒழுகலாற்றினய் வெளிப்படுத்தினார்.

மணமக்கள் இருவருமே, அழய்ப்பிதழில் சுட்டிக் காட்டப்பட்டி-ருந்த மாலய் 6 மணிக்கு அணியமாகி மேடய்க்கு வராமல், இரவு 8.15 மணிக்குத்தான் மணமேடய் ஏறியதால், மன்றல் ஒப்ப்ந்த விழா நடவடிக்கய்கள் ஆகலும் சுருக்கப்பட்டது; மன்றல் செல்வர்களய் தந்தய் பெரியார் தந்த உறுதி மொழிகளய் ஏற்க வய்த்ததோடு, இப்படிப்பட்ட சுயமரியாதய் மன்றல்களுக்கு யார் தலய்மய் தாங்கினாலும், தந்தய் பெரி-யார்தான் தலய்மய் தாங்குவதாகவும்; யார் முன்னிலய் வகித்தாலும் சுயமரியாதய்த் திருமணங்களுக்கு சட்ட ஒப்புதல் கொடுத்த பேரறிஞர் அண்ணா முன்னிலய் வகிப்பதாகவும்தான் பொருள்/அடய்யாளம் என்று மன்றலய் நடத்திவய்த்த கோரா சுட்டிக் காட்டத் தவறவில்லய்.

திருவூர் பகுதி விடுதலய்ச் சிறுத்தய்கள் செயல்வீரரும் ஊராட்சித் தலய்வரின் துணய்வருமான பீம்ராவ் ஜீவா மன்றல் மேடய் ஒழுங்குகளய் நெறிப்படுத்தினார். தனக்கும் தனது இணயர் சுகன்யாவுக்கும் சேர்த்து ஆடய் போர்த்தி பெருமய்படுத்த மணமகன் வீட்டார் முன்வந்தபோதும், ஊராட்சித் தலய்வரான தனது துணய்வியாருக்கு மட்டுமே ஆடய் போர்த்தி மரியாதய் செய்தால் போதும் என ஒதுங்கிக் கொண்டார். பின்னர், திருவூர் திக மேனாள் அமய்ப்பாளர் சுரேஷ் குமாரின் மனய்வி ஜெயந்தி, ஊராட்சித் தலய்வருக்கு ஆடய் போர்த்தி சிறப்பு செய்தார். உறுதி மொழி எடுக்க முன்னெடுத்துக் கொடுத்த, மணவிழாத் தலய்வர் கோராவுக்கும் மணமகன் வீட்டார் சார்பில் ஆடய் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

சுயமரியாதய் முறய்தனில், உறுதி மொழி எடுத்து மன்றல் காணவும், கணவனய் இழந்தாலும் மகன்கள் மீது பாசத்தய்-நேசத்தய், வீரத்தய் இழக்காத தாய் பூபதி அம்மாள் தாலி எடுத்துக் கொடுக்கவும் முழு மனதோடு ஒப்புதல் அளித்த இருவீட்டாரய்யும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மணமகள் வீட்டய்ச் சேர்ந்த பெரியவர் ஒருவர், மணமக்கள் உறுதி மொழி எடுத்த வாசகங்கள் அடங்கிய காகிதங்களின் படி தனக்கும் வேண்டும் என ஆர்வத்துடன் கேட்டபோது, அவ்வாறே செய்வதாக திருவூர் திக கிளய் மேனாள் அமய்ப்பாளர் சுரேஷ்குமார் உறுதி அளித்தார்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஒழிக பார்ப்பனர்!!!

Monday, March 8, 2010

பெரியார் திரளணி

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஒழிக பார்ப்பனர்!!!

திராவிடர் கழகத்தில் உறுப்பினர்கள் எத்தனய் பேர்? என்னும் வினா மானமிகு ஆசிரியர் அவர்களிடம் ஒருமுறய் எழுப்பப்பட்டது; கருஞ்சட்டய் சீருடய் அணிந்த கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் முதல்வகய், வண்ணவண்ண சட்டய்களில் காட்சி தந்தாலும், பெரியாரியத்தய் மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்ட கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் இரண்டாவது வகய் எனப் பகரம் வந்தது. அப்படியொரு, கண்ணுக்குத் தெரியாத, வண்ண வண்ணச் சட்டய்களய் அணிந்த, பெரியார் பற்றாளர்களின் திரளணி ஒன்றய், 7.3.2010 ஞாயிறன்று காலய் 11 மணியளவில், சென்னய், பெசண்ட் நகர் பேருந்து நிலயத்தய் ஒட்டிய இடப்புற சந்தில் அமய்ந்துள்ள எல்.வி.ஆர். பள்ளி வளாகத்தில் நீக்கமறக் காண முடிந்தது.
ஆம்! பெரியார் ஈ.வே.இரா. குறும்பாவியம் யாத்துத் தந்த பகுத்தறிவுப் பாவலர் மானமிகு இலமா. தமிழ் நாவன் - அன்னம் இணயரின் இளய மகள் இசயமுது-குணத்தொகயன் ஆகியோரது பெரியாரியப் பகுத்தறிவு நெறிமிக்க மன்றல் காட்சிதான் அது!
நிகழ்ச்சிக்குத் தலய்மய் ஏற்று, மன்றலய் நடத்தி வய்த்த கவிஞானி அ. மறய்மலயான் அவர்கள் ஆகட்டும், மன்றல் செல்வர்களய் வாழ்த்திப் பேச அழய்க்கப்பட்ட, இரண்டு மகளிர் மாண்பாளர்கள் உள்ளிட்ட பேச்சாளர்கள் ஆகட்டும், அறிவுலகப் பேராசான் அய்யா தந்தய் பெரியாரின், பார்ப்பன மந்திர-சடங்காச்சார எதிர்ப்பினய் மிகவும் வலுவாகவும் ஆழமாகவும் பதிவு செய்தனர். போதும் போதாததற்கு, மோசடி சாமியார்கள் தோலுரிப்பும் கனகச்சிதமாகவே நடந்தேறியது.
மானமிகு இலமா. தமிழ் நாவன் அவர்களின் அணுக்க நண்பரும் பெரியார் கொள்கய்வாதியாக இன்றளவும் நினய்வில் நிற்பவருமான மானமிகு இறயனார் அவர்களின் குடும்பத்தார், புதுமய் இலக்கியத் தென்றல் நிர்வாகக் குழு உறுப்பினர் மானமிகு பழனிச் செல்வன், கோரா குடும்ப எண்மர் என வண்ண உடய்களில் சமூகம் அளிக்க, பெரியார் திடல் செயல் வீரர் மானமிகு வய். கலயரசன், பெரியார் பீடுமுகம் விரவிய பின்ன(ல் மே)லாடயுடன் தனித்து-க் காட்சி தந்தார்.

பார்ப்பனப் புரோகிதக் கும்பலின் ஏக மாதா, பஹு பிதா, சற்சூத்திர மந்திர மோசடி விளக்கத்துடன் செறிவுமிக்கதாகவும் கலகலப்பூட்டும் வகயிலும் தொடக்கம் பெற்ற வாழ்த்துரய்-ஆழிப்பேரலய், போகப் போக, பெசண்ட் நகர் பேரூந்து நிலயத்தய் மய்யம் கொண்டு, சுழன்று சுழன்றடித்துத் தாக்கியது; பெரியார் பற்றாளர்களய் கழிபேருவகய் (நன்றி: பெரியாரி பேருரயாளர் மானமிகு இறயனார் அவர்கள்) அடயச் செய்தது எனில், அது மிகயாகாது.
கருஞ்சீருடய் அணியாத பெரியார் பற்றாளர்கள் திரளணியின் வீச்சு, இத்துணய் வலுவும் உரமும் மிக்கதா என, கண்டோரும் கேட்டோரும் வியக்கக் கூடிய அளவுக்கு, இலமா. தமிழ் நாவன் இல்ல மன்றல் நிகழ்ச்சி அமய்ந்தது, பார்ப்பனர்களய் விரட்டி விரட்டியடிக்கும் - அச்சுறுத்தும் ஒரு நிகழ்வே!

கோரா,
திருவூர்,
8.3.2010
பெரியார் களமு/களத்துக்காக,
பெரியார்: 2 களம்/களமு: