Monday, March 8, 2010

பெரியார் திரளணி

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஒழிக பார்ப்பனர்!!!

திராவிடர் கழகத்தில் உறுப்பினர்கள் எத்தனய் பேர்? என்னும் வினா மானமிகு ஆசிரியர் அவர்களிடம் ஒருமுறய் எழுப்பப்பட்டது; கருஞ்சட்டய் சீருடய் அணிந்த கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள் முதல்வகய், வண்ணவண்ண சட்டய்களில் காட்சி தந்தாலும், பெரியாரியத்தய் மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்ட கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர்கள் இரண்டாவது வகய் எனப் பகரம் வந்தது. அப்படியொரு, கண்ணுக்குத் தெரியாத, வண்ண வண்ணச் சட்டய்களய் அணிந்த, பெரியார் பற்றாளர்களின் திரளணி ஒன்றய், 7.3.2010 ஞாயிறன்று காலய் 11 மணியளவில், சென்னய், பெசண்ட் நகர் பேருந்து நிலயத்தய் ஒட்டிய இடப்புற சந்தில் அமய்ந்துள்ள எல்.வி.ஆர். பள்ளி வளாகத்தில் நீக்கமறக் காண முடிந்தது.
ஆம்! பெரியார் ஈ.வே.இரா. குறும்பாவியம் யாத்துத் தந்த பகுத்தறிவுப் பாவலர் மானமிகு இலமா. தமிழ் நாவன் - அன்னம் இணயரின் இளய மகள் இசயமுது-குணத்தொகயன் ஆகியோரது பெரியாரியப் பகுத்தறிவு நெறிமிக்க மன்றல் காட்சிதான் அது!
நிகழ்ச்சிக்குத் தலய்மய் ஏற்று, மன்றலய் நடத்தி வய்த்த கவிஞானி அ. மறய்மலயான் அவர்கள் ஆகட்டும், மன்றல் செல்வர்களய் வாழ்த்திப் பேச அழய்க்கப்பட்ட, இரண்டு மகளிர் மாண்பாளர்கள் உள்ளிட்ட பேச்சாளர்கள் ஆகட்டும், அறிவுலகப் பேராசான் அய்யா தந்தய் பெரியாரின், பார்ப்பன மந்திர-சடங்காச்சார எதிர்ப்பினய் மிகவும் வலுவாகவும் ஆழமாகவும் பதிவு செய்தனர். போதும் போதாததற்கு, மோசடி சாமியார்கள் தோலுரிப்பும் கனகச்சிதமாகவே நடந்தேறியது.
மானமிகு இலமா. தமிழ் நாவன் அவர்களின் அணுக்க நண்பரும் பெரியார் கொள்கய்வாதியாக இன்றளவும் நினய்வில் நிற்பவருமான மானமிகு இறயனார் அவர்களின் குடும்பத்தார், புதுமய் இலக்கியத் தென்றல் நிர்வாகக் குழு உறுப்பினர் மானமிகு பழனிச் செல்வன், கோரா குடும்ப எண்மர் என வண்ண உடய்களில் சமூகம் அளிக்க, பெரியார் திடல் செயல் வீரர் மானமிகு வய். கலயரசன், பெரியார் பீடுமுகம் விரவிய பின்ன(ல் மே)லாடயுடன் தனித்து-க் காட்சி தந்தார்.

பார்ப்பனப் புரோகிதக் கும்பலின் ஏக மாதா, பஹு பிதா, சற்சூத்திர மந்திர மோசடி விளக்கத்துடன் செறிவுமிக்கதாகவும் கலகலப்பூட்டும் வகயிலும் தொடக்கம் பெற்ற வாழ்த்துரய்-ஆழிப்பேரலய், போகப் போக, பெசண்ட் நகர் பேரூந்து நிலயத்தய் மய்யம் கொண்டு, சுழன்று சுழன்றடித்துத் தாக்கியது; பெரியார் பற்றாளர்களய் கழிபேருவகய் (நன்றி: பெரியாரி பேருரயாளர் மானமிகு இறயனார் அவர்கள்) அடயச் செய்தது எனில், அது மிகயாகாது.
கருஞ்சீருடய் அணியாத பெரியார் பற்றாளர்கள் திரளணியின் வீச்சு, இத்துணய் வலுவும் உரமும் மிக்கதா என, கண்டோரும் கேட்டோரும் வியக்கக் கூடிய அளவுக்கு, இலமா. தமிழ் நாவன் இல்ல மன்றல் நிகழ்ச்சி அமய்ந்தது, பார்ப்பனர்களய் விரட்டி விரட்டியடிக்கும் - அச்சுறுத்தும் ஒரு நிகழ்வே!

கோரா,
திருவூர்,
8.3.2010
பெரியார் களமு/களத்துக்காக,
பெரியார்: 2 களம்/களமு:

No comments:

Post a Comment